×

20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் உறவினர்களை சந்தித்து திரும்பியபோது உயிர்விட்டார்: காட்பாடி ரயில்நிலையத்தில் சோகம்

வேலூர்: 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் உறவினர்களை சந்தித்து விட்டு மீண்டும் வெளியூர் செல்ல திரும்பியபோது காட்பாடி ரயில்நிலையத்தில் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்பாடி ரயில் நிலையம் 1வது நடைமேடை நுழைவாயில் பகுதியில் அடையாளம் தெரியாத 40 வயதுள்ள ஆண் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் இறந்தவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வாலாஜா தாலுகா மேல்விஷாரம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்த ரஷீத் என்பவரது மகன் பாபு(42). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானாராம். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உறவினர்களை பார்ப்பதற்காக பாபு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு உறவினர்களை பார்த்து பேசி விட்டு  மீண்டும் வெளியூருக்கு செல்ல, காட்பாடி ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கு அவர் திடீரென இறந்து விட்டார்’ என்று தெரிவித்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் உறவினர்களை சந்தித்து விட்டு திரும்பும்போது ரயில் நிலையத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : magician ,relatives ,railway station ,Katpadi , 20 years ago, the magician, the relative, met and died
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...