×

என்னை அரசியலில் இழுக்க பாஜவும் முயற்சித்தது!: வடக்கு மும்பை காங். வேட்பாளர் நடிகை ஊர்மிளா தடாலடி

மும்பை: தேர்தல் நேரத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைவதும், கட்சி தாவுவதும் வழக்கமான ஒன்று. இதற்கிடையே சமீபமத்தில் காங்கிரஸ் கட்சியில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்  இணைந்தார். இவர் தமிழில் கமலுடன் இணைந்து ‘இந்தியன்’ படத்தில் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஊர்மிளா 1980களில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த  அவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் வடக்கு மும்பை தொகுதி ஒதுக்கப்பட்டது. அவரை எதிர்த்து, பாஜ கட்சின் சிட்டிங் எம்பியான கோபால் ஷெட்டி மீண்டும் போட்டியிடுகிறார். நாளை வடக்கு மும்பையில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்றுடனம் ஊர்மிளா தனது இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது, தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:  கடந்த 5 ஆண்டுகால  பாஜ ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை. கடந்த 2014ல் மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் நான் டிக்கெட் கேட்கவில்லை. ஆனால், கடந்த 15 முதல் 17  ஆண்டுகளாக பாஜ உள்ளிட்ட பல கட்சிகள் என்னை அரசியலில் இழுக்க முயற்சித்தன. அரசியல் ரீதியாக பாஜ கட்சி சரியானது அல்ல; தற்போது சரியான முடிவை எடுத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் நிறைய இடத்தில் நாம் குரல் கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னுடைய துறையில் இருப்பவர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் பலர் ‘ஆன்டி   இந்தியன்’ என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு நாட்டுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கேட்கப்பட்டால், அவர்களின் தேச பக்தியைப் பற்றி கேள்வி  கேட்கப்பட்டது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பயங்கரமான விஷயங்களாக இவை உள்ளன.

நாட்டை சீரமைப்பதற்கு பதில் அவர்களது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான அரசியல் சூழலில் முக்கியமான முடிவெடுப்பது நமது கடமை. நான் இங்கு பதவிக்காக வரவில்லை. என்னைப் போன்ற ஒத்த  கருத்துடைய கட்சியில் இப்போது நான் இணைந்திருக்கிறேன். ஒரு கட்சி, சாதி, மத, இன அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஆனால் எங்களுக்கு அர்ப்பணிப்புள்ள தலைவர் (ராகுல் காந்தி) இருக்கிறார். பாஜ கட்சி  தன்னை பிரபலபடுத்திக் கொள்ள பல லட்சம் கோடி ரூபாய்க்களை செலவு செய்கிறது. ஆனால், இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் நாட்டு மக்களுக்காக துப்பாக்கிகளுக்கு பலியாகினர். பாஜ கட்சி எந்த அடிப்படையில் மக்களிடம்  வாக்கு கேட்கிறது.

வடக்கு மும்பை தொகுதியில் குடிசைகளை சீரமைப்பது தான் முதல் வேலை. அடுத்ததாக லோக்கல் ட்ரெயின்களை மேம்படுத்த வேண்டும். ரயில் நிலையங்களை சீரமைத்து நிறைய ரயில் சேவைகளை உருவாக்க வேண்டும்.  அடுத்ததாக பெண்கள் ஆரோக்கிய மையம். அடிப்படை உடல்நல பராமரிப்புக்குக் கூட பணம் இல்லையா? இங்கு நான் வென்றாலும் தோற்றாலும், மருத்துவர்களை அழைத்து வந்து அடிப்படை மருத்துவ உதவிகளையும் ஆரோக்கிய  நலனுக்காக கட்டாயம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajaj ,Urmila Ambalady ,Northern Mumbai Cong ,candidate , Political, BJP, North Mumbai. Candidate, actress Urmila
× RELATED பஜாஜ் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா