×

ஒரு லிட்டர் 50 ரூபா! உடன்குடி பகுதியில் களைகட்டுது பதநீர் விற்பனை

உடன்குடி: உடன்குடி பகுதியில் தற்போது பதநீர் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் பதநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.50க்கு விற்பனை செய்து வருகின்றனர்.மாநிலத்தின் மரமான பனைமரம் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள உடன்குடி பகுதியில் அதிகளவில் உள்ளது. கடுமையான வறட்சிப்பகுதிகளில் கூட பனைமரம் செழிப்பாக வளரும். பனைமரத்தின் அனைத்துப்பொருட்களும் பல்வேறு வகைகளில் பயன் தருகின்றன.பனைகளின் பாளைகளைச் சீவி நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பதுதான் பதனீர். இனிப்புச்சுவையுடன் கூடிய இந்த பதனீர் உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊக்கம் தருவதுடன் வெயில்  காலங்களில் வரக்கூடிய நோய்களையும் கட்டுப்படுத்தும். பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைப்பதுடன் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுக்கும்  ஆற்றல் உண்டு.

 ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பதநீர் வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே கிடைக்கும். தற்போது உடன்குடி பகுதியில் பதநீர் சீசன் களைகட்டியுள்ளது. பனைமரத்தில் இருந்து பதநீரை இறக்க கேரளா, நாகர்கோவில்,  வேம்பார் பகுதிகளில் இருந்து ஏராளமான பனைத்தொழிலாளிகள் வந்து இரவு, பகலாக பனை ஏறி வருகின்றனர். குறிப்பிட்ட சீசன் காலத்தில் மட்டுமே கிடைப்பதால் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது 1 லிட்டர் பதநீர் ரூ.50  வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதநீர் இறக்கும் பகுதியில் போய் குடித்தால் பனை ஓலையால் ஆன பட்டை முடைந்து அதன் மூலம் பதநீர் பருக வழங்கி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Udangudi , One liter, coarse cotton
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது