×

சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோரே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பார்கள்: சரத்பவார் கருத்து

மும்பை: தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறாத பட்சத்தில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோரே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பார்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவார் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 543 எம்பி பதவிகளுக்கு 302 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கு மட்டும் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மூன்றாம் கட்ட வாக்குபதிவு இந்த தொகுதியில் சில பகுதிக்கு முடிந்த நிலையில், 4, 5ம் கட்ட வாக்குப்பதிவுடன் இந்த தொகுதிக்கான தேர்தல் முடிகிறது. இந்நிலையில், நாளை 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கடைசிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மகராஷ்ராவில் காங்கிரசுடன் கூட்டணி குறித்து சரத்பவார் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை கிடைக்காது.

 கடந்த முறையை விட பா.ஜனதா கூட்டணிக்கு 100 இடங்கள் குறைவாக கிடைக்கும் என்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த 3 பேருக்குத்தான் பிரதமர் ஆக அதிக தகுதி இருக்கிறது. இந்த 3 பேருக்கும் மாநிலங்களை ஆண்ட அனுபவம் இருப்பதால் நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு குஜராத் முதவராக இருந்தார். இதனால் மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் பிரதமருக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது எனது கருத்து.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம் இருக்கிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்றும், அதற்கு ஆசைப்பட வில்லை என்றும் அவர் பலமுறை தெரிவித்து இருக்கிறார். இதேபோல நானும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. எங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 22 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாது, இதனால் பிரதமர் பதவி பற்றி நான் சிந்திக்கவில்லை என்றும் சரத்பவார் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrababu Naidu ,Sarath Babar ,race ,Mamata Banerjee ,Mayawati , Chandrababu Naidu, Mamata Banerjee, Mayawati, Prime Minister's Office, Sarath Pawar
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....