×

மருத்துவமனைக்குள் புகுந்து பயங்கரம் திருமணம் செய்ய மறுத்த நர்சுக்கு கத்திக்குத்து: பயத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

சென்னை: திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை, தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிய வாலிபர் போலீசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (20). இவர் காஞ்சிபுரம் நிமந்தகார தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும், இவரது உறவினர் வண்டலூரை சேர்ந்த முத்து (24) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ஏதோ காரணத்தால் திருமணபேச்சு நின்றுவிட்டது. இதையடுத்து, கடந்த 2  மாதங்களாக காஞ்சிபுரத்தில் செவிலியர் பணிக்கு வரும் ஜெயந்தியை, முத்து அடிக்கடி சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஜெயந்தி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முத்து, ஜெயந்தி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு நேற்று மதியம் சென்றார். அங்கு, மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஜெயந்தி, திருமணம் செய்ய முடியாது என  திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த முத்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜெயந்தியின் கழுத்தில் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த ஜெயந்தியை, சக மருத்துவமனை  ஊழியர்கள், மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தகவலறிந்து சிவகாஞ்சி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், தப்பியோடிய முத்துவை தேடிவந்தனர். ஆனால், முத்து அதே தனியார்  மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மயக்க நிலையில் கிடந்தார்.உடனே அவரை மீட்ட போலீசார், முத்துவையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை, தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கத்தியால் குத்திவிட்டு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nurse ,nurses ,hospital , hospital, marry, Nurse, knife
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...