×

வங்கக்கடலில் பானி தீவிர புயலாக மாறியது தமிழக கரையை கடக்க வாய்ப்பில்லை

* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
* வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: பானி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதிகப்பட்சமாக 107 டிகிரி வரை  வெயில் பதிவானது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இந்த கொடுமை அடங்குவதற்குள் வெயிலின் கோரத்தாண்டவம் என்று அழைக்கப்படும் “அக்னி நட்சத்திரம்” அடுத்த வாரம் தொடங்க உள்ளது.இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து சிறிது வெப்பத்தை தணித்ததுள்ளது.அதன் பிறகு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்று சூழற்சி ஏற்பட்டது. அந்த காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியது. நேற்று முன்தினம்  அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இது மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:தென்கிழக்கு வங்கங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. பானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார்  1250  கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  இது தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும். இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து  30ம் தேதி மாலை வடதமிழகம், தெற்கு ஆந்திரா கரை பகுதிகளுக்கு அருகில்  வரக்கூடும்.  சென்னையை நோக்கி புயல் வர வாய்ப்பு குறைவு.
தற்போதைய நிலவரப்படி புயல் கரையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வரக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள்  இருக்கிறது. தமிழக கடற்கரையை கடப்பதற்கான சாத்தியகூறுகள்  குறைவாக உள்ளது. திசை மாறி  செல்வதால் ஒரு சில இடங்களில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. புயல் அருகில் வர தான் வாய்ப்பு உள்ளது. கடற்கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. அந்த நேரத்தில் அந்த பகுதிகளில் 150 கிலோ மீட்டர்  வேகத்தில் காற்று வீசலாம். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடல் சீற்றத்தடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bani ,storm ,bay ,Bengal , Bengal bani,storm, Tamil Nadu, border
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...