காவல்கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ‘இலங்கையில் குண்டு வைத்தது நான்தான்’: போதையில் மிரட்டிய ஆசாமி கைது

சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இலங்கையில் குண்டு வைத்தது நான் தான் என்றும் கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளேன் என்று கூறி போலீசாரையே மிரட்டிய போதை ஆசாமி கைது  செய்யப்பட்டார்.சென்னை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 25ம் தேதி மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘இலங்கையில் நான்தான் குண்டு வைத்தேன் என்றும், கோயம்பேடு மேட்டுகுப்பம் பகுதியிலும்  குண்டு வைத்துள்ளேன். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்’’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.இதனால் அதிர்ந்து போன போலீசார், உடனே அந்த நம்பரை ஆய்வு செய்தபோது, அது வள்ளியம்மை சாலை பெரியார் நகர் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் மைக்கேல் பிரெடி (43) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.  இதையடுத்து, அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவரது மனைவி நவீனா மட்டும்தான் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, கடந்த 2 நாட்களாக மைக்கல் பிரெடி வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிந்தது.

இதையடுத்து, கோயம்பேடு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில், மைக்கேல் பிரெடி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த தகவல் அறிந்து அங்கு  சென்ற போலீசார் அவரை கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், சம்பவம் அன்று அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் போலீசாருக்கு போன் செய்து மிரட்டியதை  ஒப்புகொண்டார்.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நேற்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : one ,Sri Lanka ,Assam , guard room, Sri Lanka, Aam Aadmi, arrested
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 661 கிலோ கஞ்சா பறிமுதல்