×

லிவிங்ஸ்டோன், சாம்சன் அதிரடி: ராயல்ஸ் வெற்றி

ஜெய்பூர்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், லிவிங்ஸ்டன், சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக வார்னர், வில்லியம்சன் களமிறங்கினர். வில்லியம்சன் 13 ரன் எடுத்து கோபால் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

இதைத் தொடர்ந்து வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 75 ரன் சேர்த்தது. நிதானமாக விளையாடிய வார்னர் 37 ரன் (32 பந்து) எடுத்து பெவிலியன் திரும்பினார். மறு முனையில் மணிஷ் பாண்டே அரை சதம் அடித்து அசத்தினார். மணிஷ் 61 ரன் (36 பந்து, 9 பவுண்டரி) விளாசி கோபால் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த விஜய் ஷங்கர் 8, ஹூடா 0, சாஹா 5, ஷாகிப் அல் ஹசன் 9, புவனேஷ்வர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. ரஷித் கான் 17 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), சித்தார்த் கவுல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் தாமஸ், கோபால், உனத்காட், ஆரோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐதராபாத் இன்னிங்சில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது.

ரகானே-லிவிங்ஸ்டன் துவக்க ஜோடி 78 ரன் சேர்த்தது. அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 26 பந்தில் 44 ரன் (3 சிக்சர், 4 பவுண்டரி) விளாசி ரஷித்கான் சுழலில் ஆட்டமிழந்தார். ரகானே 39 ரன்னில் ஷாகிப் அல் ஹசன் சுழலில் வெளியேறினார். ஸ்மித் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடி ஆட்டமிழக்காமல் 48 ரன் (32 பந்து) அணியை வெற்றி பெறச் செய்தார். ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Livingstone ,wins , Livingstone, Samson, Action, Royals, Success
× RELATED 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப்