×

சசிதரூருக்கு சம்மன்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிரதமர் மோடியை ‘தேள்’ என்று விமர்ச்சித்த சசிதரூருக்கு எதிரான அவதூறு வழக்கில், வரும் ஜூன் 7ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. பெங்களூருவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த இலக்கிய விழா ஒன்றில், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் கலந்துகொண்டார்.

அதில் முரண்பாடு மிக்க பிரதமர்’ என்ற தனது நூல் குறித்து பேசிய அவர், பிரதமர் மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்’ போன்றவர். அதை கையால் தட்டி விடவும் முடியாது. செருப்பால் அடித்து விரட்டவும் முடியாது’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் கூறியதாக குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பாஜ தலைவர் ராஜீவ் பப்பர் டெல்லி நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

அதில், தான் ஒரு சிவ பக்தர் என்றும், தன்னுடைய மத உணர்வுகளையும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான சிவபக்தர்களின் மத உணர்வுகளையும் சசி தரூரின் சர்ச்சை பேச்சு புண்படுத்தியதாக கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிதரூர் ஜூன் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi , Sasithar, Summon, Delhi court, order
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...