×

மோடியின் தேர்தல் செலவு ரூ.70 லட்சத்தை தாண்டியது: தேர்தல் ஆணையத்தில் ஏஏபி புகார்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். அதற்கு முந்தைய நாள், வாரணாசியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. அதற்கு ரூ.1.27 கோடி செலவிடப்பட்டு உள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், ‘‘பிரதமர் மோடியின் வாரணாசி பேரணிக்கு ரூ.1.27 கோடி செலவிடப்பட்டு உள்ளது. பாஜ தலைவர்கள் வாரணாசி சென்றுவர தனியார் ஜெட் விமான செலவு ரூ.64 லட்சம். 100க்கும் அதிகமான பாஜ தலைவர்கள் தனியார் விமானத்தில் வந்த செலவு ரூ.15 லட்சம். உணவுக்காக ரூ.5 லட்சம் என ரூ.1.27 கோடி  செலவிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் மொத்த செலவு வரம்பு ரூ.70 லட்சம் என்பதால்  இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,EC ,AAP , Modi, election, cost, Rs 70 lakhs
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...