×

பார்சிலோனா ஓபன்: பைனலில் மெட்வதேவ்

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் தகுதி பெற்றார். அரை இறுதியில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியுடன் நேற்று மோதிய மெட்வதேவ் 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி, 24 நிமிடம் போராடி வென்றார். ரபேல் நடால் - டொமினிக் தீம் இடையே நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் வீரருடன் பைனலில் மெட்வதேவ் மோதுவார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barcelona ,Medvedev ,Bainal , Barcelona, Open, Final, Medvedev
× RELATED யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு...