×

ஒலிம்பிக் ‘கோட்டா’வுடன் தங்கம் அபிஷேக் வர்மா அசத்தல்

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா (29 வயது) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். விறுவிறுப்பான பைனலில் அவர் 242.7 புள்ளிகள் குவித்து முதல் இடம் பிடித்தார். ரஷ்யாவின் அர்டெம் செர்னோசோவ் (240.4) வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் சியூங்வூ ஹான் (220.0) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

முதல் முறையாக உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியிருந்த அபிஷேக், தங்கம் வென்றதுடன் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு ஒரு இடத்தையும் உறுதி செய்தார். நேற்று முன்தினம் 17 வயது இளம் வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்று ஒரு ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhishek Varma ,Olympic ,Kota , Olympic, 'Kota', Gold, Abhishek Verma, Wacky
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...