×

3 போட்டியில் நெய்மருக்கு தடை

ஐரோப்பிய கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் நெய்மர் (பிரேசில்), நடுவர்கள் குறித்து இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. ‘சாம்பியன்ஸ் லீக் கால் இறுதிக்கு முந்தைய போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு எதிராக நாங்கள் தோற்றதற்கு நடுவர்களே காரணம், குறிப்பாக கடைசி நேரத்தில் பெனால்டி வழங்கிய டாமிர் ஸ்கோமினா நடுவராக இருப்பது மிகப் பெரிய அவமானம்’ என்று நெய்மர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய ஐரோப்பிய கால்பந்து நிர்வாகம், நெய்மருக்கு 3 போட்டியில் விளையாடத் தடை விதித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Neymar ,matches , 3 competition, Neymar, banned
× RELATED சில்லி பாய்ன்ட்…