×

முன் அனுமதியின்றி பேரணி பாஜ வேட்பாளர் கம்பீர் மீது வழக்கு டெல்லி தேர்தல் அதிகாரி அதிரடி

அனுமதி பெறாமல் பேரணி மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜ வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய போலீசுக்கு கிழக்கு டெல்லி தொகுதி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். மாஜி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜவில் கடந்த மாதம் இணைந்தார். கம்பீருக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்தது. அவருக்கு எதிராக ஆம் ஆத்மியில் அடிஷி, காங்கிரசில் அர்விந்த் சிங் லவ்லி போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கியதில் இருந்து, கம்பீர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். வேட்புமனு படிவத்தில் குளறுபடிகள் செய்ததாக, மனுத்தாக்கலின் போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கம்பீர் மீது புகார் கூறப்பட்டது. புகாரில் கூறப்படும் குற்றச்சாட்டு, அந்தளவுக்கு தீவிரமானதல்ல எனக் கூறி கம்பீரின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டு அறிவித்தார்.

அதையடுத்து, கம்பீருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை உள்ளது, அதனை தேசிய வாக்காளர் பட்டியலில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என கம்பீரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அடிஷி மறுபடியும் பிரச்னை எழுப்பினார். இதுதொடர்பாக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், கம்பீர் ஒரு புது சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் அவர் பேரணி நடத்தியதாக குற்றச்சாட்டு இப்போது வெடித்துள்ளது.

கிழக்கு டெல்லியின் ஜங்புராவில் 25ம் தேதி அன்று கம்பீர் நடத்திய பேரணிக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாத கம்பீர் மீது அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி ரன்பிர் சிங் கூறியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து, கம்பீர் மீது எப்ஐஆர் பதிவு செய்யும்படி போலீசுக்கு கிழக்கு டெல்லி தொகுதி தேர்தல் அதிகாரி கே.மகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gambhir ,New Delhi: The Election Commission ,Gurgaon , Rally, gambling, case. Delhi Election Officer, Action
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...