×

அகிலேஷ், மாயாவதி முயற்சி தோல்வியில் தான் முடியும்: பிரதமர் மோடி பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எந்த முயற்சியை செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும்,’’ என்று பிரதமர் மோடி பேசினார். உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜ் மற்றும் ஹர்டோயில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி நேற்று  பங்கேற்று பேசியதாவது: உபியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்,  ராஷ்டிரிய லோக்தளம் ஆகியவை இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணி  அமைத்துள்ளன.

நாட்டின் காவலாளியான என்னையும், ராம பக்தர்களையும்  எதிர்க்கட்சிகள் தாக்கி பேசி வருகின்றன. அவர்களின் நோக்கம் மக்களின் பணத்தை திருடுவதும், சாதி  குறித்து பேசுவதும்தான். ஆனால் எனக்கு சாதி அரசியலில் நம்பிக்கை இல்லை. மாயாவதி அவர்களே நான் மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன். ஆனால் என்னை சாதி அரசியலுக்குள் இழுக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் எந்த முயற்சியில்  ஈடுபட்டாலும் அது தோல்வியி லேயே முடியும். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி,  சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத் துள்ளது வேடிக்கையானது; மட்டுமின்றி  நகைச்சுவையானதும் கூட. அகி  லேஷ்சின் ஆதரவை மாயாவதி கேட்டிருப்பது ஆட்சி  அதிகாரத்தை கைப்பற்றத்தான்.

அம்பேத்கரை அவமானப்படுத்திய சமாஜ்வாடியுடன், மாயாவதி ஓட்டுக்காக கூட்டணி சேர்ந்துள்ளார். என்னை தோற்கடிக்க அவர்கள் கைகோர்த்துள்ளனர். சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜூம் தங்களுக்காகவே பிரசாரம் செய்கின்றனர். ஆனால் நீங்கள் உங்கள் காவலாளிக்காக சாலைகளில் இறங்கி பிரசாரம் செய்கிறீர்கள். இவ்வாறு மோடி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Akhilesh ,Mayawati , Akhilesh, Mayawati, attempt, failure, PM Modi, talk
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை