×

இதெல்லாம் ஒரு பொழப்பா? மூன்மூன் மீது பபுல் பாய்ச்சல்

பிரபல நடிகை மூன்மூன் சென், 2014ம் ஆண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது நடந்த மக்களவை தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பான்குரா தொகுதியில் போட்டியிட்டார். இங்கு, தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால், இந்த தேர்தலில் அவர் அசன்சோல் தொகுதிக்கு மாறி போட்டியிடுகிறார். பாஜ சார்பில் தற்போதைய எம்பி பபுல் சுப்ரியா போட்டியிடுகிறார். இங்கு நாளை தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், அம்ரித்நகர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மூன்மூன் சென், அப்பகுதியில் வசிக்கும் பீகார் தொழிலாளர்களை போலீசாருக்கு துப்பு கொடுக்கும் உளவாளிகள் என்று விமர்சித்தார். மேலும், ‘எனக்கு வாக்களிப்பது இறந்த எனது தாயாரும், நடிகையுமான சுசித்ரா சென்னின் ஆன்மாவை மகிழ்விக்கும்’ என்றும் பேசினார். அதோடு, பபுல் சுப்ரியாவையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார்.

இது குறித்து பபுல் சுப்ரியா அளித்த பேட்டியில், குருட்டுத்தனமான, மிரட்டும் அரசியலில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. ஆனால், இங்கு அதுதான் நடக்கிறது. மூன்மூன் வெளிநாட்டில் படித்தவர் என்பதால், என்னை தனிப்பட்ட முறையில் தாக்காமல் கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் மாறுவார் என்று நினைத்து பார்க்கவில்லை. மேலும், இறந்த தனது தாயாரின் பெயரைச் சொல்லி அவர் ஓட்டு கேட்பது மிகவும்  வேதனை அளிக்கிறது,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : All these things ?, Moon Moon, Babul, Flow
× RELATED தினமும் பேசவேண்டும் என்று நினைக்கும்...