×

கேரளாவின் காசர்கோடு தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

* வீடியோ வெளியானதால் பரபரப்பு
* தேர்தல் ஆணையத்தில் காங். புகார்

கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கள்ள ஓட்டு  போட்டது தெரியவந்துள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த  23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 77.68 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் காசர்கோடு, கண்ணூர் உள்பட பல தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கள்ள ஓட்டு போட்டதாக, கண்ணூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாகரன் உள்பட  காங்கிரசார் குற்றம்சாட்டினர். ஆனால் அதை கம்யூனிஸ்ட் கட்சியினர் மறுத்தனர்.

இந்த  நிலையில் காசர்கோடு தொகுதியில் உள்ள பிலாத்தரை மற்றும் எருமம் குற்றூர் ஆகிய 2 பூத்களில் ஏராளமானோர் கள்ள ஓட்டு போடும் போட்டோ மற்றும் வீடியோ   காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ காட்சியில், கண்ணூர் செறுதாழம் பஞ்சாயத்து உறுப்பினர் செலினா மற்றும் முன்னாள் பஞ்சாயத்து பெண் உறுப்பினர் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர் கள்ள ஓட்டு போடுவது பதிவாகியுள்ளது.  அதில் பத்மினி என்ற பெண் ஒரே பூத்தில் 2 முறை கள்ள ஓட்டு போடுகிறார்.
 
முதல் முறை ஓட்டு போட்டவுடன் அவர் கையில் வைத்த மையை தலையில் தேய்க்கும்   காட்சியும் பின்னர் மீண்டும் வாக்களிக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகி  உள்ளது. இந்த பூத்களில் ஒருவருக்கு பதில் வேறு ஒருவர் வாக்களித்ததும், ஒரே நபர் 2 முறை வாக்களித்ததும் தெரிய வந்துள்ளது. இதற்காக போலி அடையாள அட்டைகளையும் இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து காங்கிரசார் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். இதுபற்றி தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CPI (M) ,constituency ,Kerala , Kerala, Kasaragod, constituency, counterfeit, Marxist Party
× RELATED கம்பம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை