×

தொழில்நுட்பம் சார் குற்றங்களை தடுக்க நடவடிக்கை வேண்டும்: நீதிபதி தமிழ்வாணன் பேச்சு

சென்னை: தொழில்நுட்பம் சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை என்று மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் தமிழ்வாணன் பேசினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ‘‘செக்யூரிங் தி சைபர் ஸ்பேஸ், டிஜிட்டல் கன்சியூமரிசம்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் துவக்கவிழா நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவருமான தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். டிஜிட்டல் செக்யூரிட்டி அசோசியேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. டிசாய் குவெஸ்ட் என்ற அந்த அமைப்பின் மாதாந்திர இணைய இதழையும் அவர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி தமிழ்வாணன் பேசியதாவது: நாம் நாகரீக வளர்ச்சி பெற்ற சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால் சட்டப்படியே அனைத்தும் நடக்க வேண்டும். தகவல் தொடர்புத்துறை வளர்ச்சி நமக்கு பல வகைகளில் உதவுகிறது. வீடியோ கான்பரன்சிங் முறையில் கருத்து கேட்டு பணியாற்ற முடிகிறது. உலகின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வை, உடனுக்குடன் உலகின் மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்லும் வகையில் தகவல்ெதாடர்பு வசதிகள் வளர்ந்துவிட்டது. சுனாமி, பூகம்பம் போன்ற தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்பட்டு, பலரை சென்றடைகிறது.

அதே நேரத்தில் சமூகத்தில் ஏராளமான பிரச்னைகளும் ஏற்படுகிறது. தீவிரவாதிகள், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நம்மை விட தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். தனி நபரின் அந்தரங்கம் பகிரப்படுகிறது. ஒரு நபருடைய அந்தரங்கமான விஷயங்களை, அவரே ரகசியமாக வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. அது குறிப்பிட்ட நபரின் வாழ்க்கையை பாதிக்கிறது, இது நம் சமூகத்துக்கு கேடானது. தொழில்நுட்பங்கள் சமூக வளர்ச்சி, எளிமையான பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் அவற்றிலும் குற்றங்கள் நடைபெறுகிறது. இன்று ஆன்ைலன் விற்பனை நிறுவனங்களில் வாங்கும் பொருளில் பிரச்னை என்றால் அவற்றை சரி செய்து தருவது குறைவாகவே உள்ளது. பொருளை பெறும் முன்னரே அதற்கான பணம் டிஜிட்டல் பேமன்ட் ஆக செலுத்தப்பட்டு விடுகிறது. டிஜிட்டல் பேமன்ட்கள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். 2008ம் ஆண்டு டிஜிட்டல் கையெழுத்து, எலக்டிரானிக் கையெழுத்து மூலம் பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகமானது. தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி பதிவுகள் பல குற்றங்களுக்கு எதிரான சாட்சிகளாக வைக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை. இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுவதன் மூலம், இணையவழி குற்றங்களை குறைப்பதற்கான வழிமுறை கண்டறிய வேண்டும். இவ்வாறு நீதிபதி தமிழ்வாணன் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Judge , technical offense, Judge, Tamilnadu
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு