×

உள்ளூர் வணிக வாகனங்களுக்கான சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.ேக.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்து செல்கின்ற வணிக வாகனங்களுக்கு ஏற்கனவே வசூல் செய்த கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியிருப்பதை திரும்ப பெற முன்வர வேண்டும்.  ஏற்கனவே உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையானது 2008ல் ரத்து செய்யப்பட்ட போது எதிர்ப்பு ஏற்பட்டதால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அதே போல ஒரு நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டிருப்பது தவிர்க்கப்பட்ட வேண்டிய ஒன்று. பொதுவாக நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது என பொது மக்களும், வணிகர்களும், வியாபாரிகளும், வாகன ஒட்டிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக நெடுஞ்சாலைகளில் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யாமல் இருப்பது தான் உகந்தது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் இதுவரை வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை மேலும் இரண்டு மடங்காக உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வணிக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தற்போது உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணத்தால் மேலும் பொருளாதார சிக்கலில் சிக்கி பாதிக்கப்படுவார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக இந்த சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GK Vasan , local business vehicle, GK Vasan,
× RELATED பாஸ்டேக் வேலை செய்யாவிட்டால்...