×

கோயில்களில் வேட்டையாடும் காக்கிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோயில் கொடை விழா என்றால் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்கவே அஞ்சுகின்றனர். ெகாடை விழா அழைப்பிதழை அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் அளித்தால் அத்துடன் அதிகாரிக்கு ஒரு தொகை, போலீசாருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை, மதியம் சாப்பாடு, காலை, இரவு டிபன் ஆகியவற்றுக்கும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டுமாம். கொடை விழா நடக்கும் கோயிலுக்கு பகல் அல்லது இரவில் போலீசாரின் ரோந்து வாகனம் வந்து சென்றால் அதற்குரிய டீசல் அல்லது பெட்ரோலுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை எக்ஸ்ட்ரா மொய் வேறு.

இதனால் கொடை விழா நடத்துபவர்கள் வீடு, வீடாக சென்று வசூலிக்கும் வரி பணத்தில் ஜி.எஸ்.டி. மாதிரி, கால் பங்கு காக்கிகளுக்கு ஒதுக்க வேண்டியுள்ளதாம். அந்த பகுதிகளில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சுடலைமாடன், அம்மன் கோயில்கள், வீடுகளில் குறி சொல்பவர்களிடம் வசூல் வேட்டை நடத்துவதுடன், சுவாமிக்கு நேர்த்திக்கடன் படைக்கும் மது பாட்டில்கள், மட்டன் கறி, சோறும் காக்கிகளுக்கு படைக்க வேண்டுமாம். இது மட்டுமா.... உயிருள்ள கோழிகளையும், சேவல்களையும் லபக்கி விடுகின்றனராம். பட்டியல் நீள்கிறது... இதை நீ தான் கேட்கனும் சாமி என்கின்றனர் சாமியாடிகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temples , Hunting, temples
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு