×

உலகம் பலவிதம்

3 காலில் சர்பிங்
அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தின் கோகோ பீச்சில் நாய்களுக்கான சர்பிங் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஜாக் ரஸ்ஸல் என்ற பெண் நாய், பல அலைகளை கடந்து சாமர்த்தியாக கரையை வந்தடைந்து வெற்றி பெற்றது. இத்தனைக்கும் இந்த நாய்க்கு 3 கால்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி போய் வாள்

சூடானில் மக்களின் கடும் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக, அதிபர் உமர் அல் பசிர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிபரை வெளியேற்றிய, ராணுவம் ஆட்சி நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டது. இப்போது மக்களாட்சி கோரி சூடான் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருகி–்றார்கள். தலைநகர் கர்டோயமில் ரயிலை மறித்து பிரமாண்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.


பாரம்பரிய விளையாட்டு
ஈஸ்டருக்கு அடுத்த தினம் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை கண்டுபிடிக்கும் விளையாட்டு பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. ஹங்கேரியில் அன்றைய தினம் இளம்பெண்கள் மீது இளைஞர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் விளையாட்டும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. பாரம்பரிய உடை அணிந்த படி, இளைஞர்கள் தெருக்களில் இளம்பெண்களை விரட்டிக் கொண்டு சென்று அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விளையாடுகின்றனர்.

தென் ஆப்ரிக்காவில் வெள்ளம்
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த திங்கட்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலியாகினர். டர்பன் அருகே மலையடிவாரத்தில் இந்து கோயிலை ஒட்டி வெள்ள நீர் பாய்கிறது.

பல வண்ண மலர்கள்
நெதர்லாந்தின் டென் ஹெல்டர் நகரில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான மலர்ச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. பூத்துக்குலுங்கும் வண்ண மலர் விவசாய பண்ணைக்கு மேல் பாராசூட் மூலம் இருவர் பறக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : world , Different world
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...