×

அப்பா காங்கிரஸ்; பிள்ளை பாஜ. அம்பானியின் ராஜதந்திரம்

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். நாட்டின் நம்பர்- 1 பணக்காரர். இவருடைய தம்பி அனில் அம்பானி. ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால்கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகறார். அதே நேரம், காங்கிரசுக்கு ஆதரவாக முகேஷ் அம்பானி இருக்கிறார். மகராஷ்டிராவில் வரும் 29ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.

தெற்கு மும்பையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்துள்ளார். ‘தெற்கு மும்பைக்கு சரியான நபர் மிலிந்த்தான்,’ என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அதே நேரம், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த், மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் நடந்த மோடி ஆதரவு பிரசார கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த வீடியோ காட்சியை மராத்தி செய்தி சேனல் வெளியிட்டு இருக்கிறது. இந்த முரண்பாடு விவாதமாகி இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambani ,Congress Boy , Congress, bjp, Ambani,
× RELATED ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால்...