×

ஐபிஎல் டி20 போட்டி: ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

சன் ரைசர்ஸ் 10போட்டியில் ஆடி 5 வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளன. இனி வரும் 4 போட்டியிலும் வெற்றி பெற்றால் சிக்கலின்றி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். வார்னர் 574ரன் குவித்து பார்மில் உள்ளார். அதேநேரத்தில் பேர்ஸ்டோவ் நாடு திரும்பி விட்டார். இதனால் அவருக்கு பதில் இன்று மார்ட்டின் கப்தில் களம் இறங்குவார் என தெரிகிறது. மணிஷ் பாண்டே பார்முக்கு திரும்பி உள்ளார். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ரஷீத்கான் எதிரணிகளுக்கு நெருக்கடி அளித்து வருவது பலம்.

மறுபுறம் ராஜஸ்தான் 11 போட்டியில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்த 3 போட்டியிலும் வெற்றிபெற்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அந்த அணியின் பிளேஆப் வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பி விட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்மித் ஆகியோரையே பேட்டிங்கில் பெரிதும் நம்பி உள்ளது. பந்துவீச்சில் வருண் ஆரோன் கடந்த போட்டியில் அசத்தினார். இருஅணிகளும் நடப்பு சீசனில் ஏற்கனவே மோதிய போட்டியில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் 10 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் சன்ரைசர்ஸ் 6, ராஜஸ்தான் 4 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Rajasthan ,squad selection ,Hyderabad , IPL T20 match, Hyderabad team, Rajasthan squad, ball range selection
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?