×

சீனாவில் அவெஞ்சர்ஸ் படத்தைப் பார்த்த பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

பெய்ஜிங்: சீனாவில், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுத பெண், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் அண்மையில் திரையில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த திரைப்படம் சீனாவிலும் திரையிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சீனாவின் நிங்போ நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸியாலி என்பவர் இப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்டு கண் கலங்கியுள்ளார். நேரம் செல்லச் செல்ல தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் அதிகமான அழுகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.உடனே அங்கு இருந்தவர்கள் ஆக்சிஜன் மாஸ்க் உதவியோடு அவரை  மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,Avengers ,hospital , In China, Avengers, Breathing, Hospital
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...