×

ராசிபுரம் விவகாரம் : 5 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் தவறான முகவரி கொடுத்தது விசாரணையில் அம்பலம்

ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த 5 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் தவறான முகவரி கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 5 சான்றிதழ்களில் உள்ள முகவரிகளில் வசிக்கும் பெண்களிடம் குறிப்பிட்ட குழந்தைகள இல்லை என திடுக்கிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு அரசு மருத்துவமனை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 15 தனியார் மருத்துவ மனைகளில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ வெளியானது. இதுகுறித்து அமுதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குழந்தைகளை கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அமுதா மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நாமக்கல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் தகவல்களை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

மேலும் குழந்தைகளை விற்பனை செய்த ஊர்களுக்கு ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவை அழைத்து சென்று ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லி மலையை சார்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தனியார் செவிலியர் பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அமுதாவிற்கு உதவியது தெரியவந்துள்ளது.

முருகேசனிடம் நடத்திய விசாரணையில் கொல்லிமலை பகுதியில் இருந்து 4 குழந்தைகளை பெற்று அமுதாவிடம் விற்பனை செய்துள்ளதாகவும், அதே போல 8 குழந்தைகளை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்டுள்ள சுமார் 4500 பிறப்பு சான்றிதழ்களையும், கொல்லிமலையில் வழங்கப்பட்டுள்ள சுமார் 1000 பிறப்பு சான்றிதழிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 15 தனியார் மருத்துவ மனைகளில் சோதனை நடைபெற்றது. இதில் 5 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் தவறான முகவரி கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rasipuram , Rasipuram, Government Hospital, Birth Certificate, Children's Sale
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து