×

ஆங்கிலேயரை எதிர்த்த அரசியின் அரண்மனை

ராமநாதபுரம் மாவட்டத்தை ஒரு ரவுண்டு போய்ட்டு வந்திட்டோம்.  அப்படியே பக்கத்துல இருக்கிற சிவகங்கை மாவட்டத்துக்கும் சிட்டாய் பறந்து பார்த்திட்டு வருவோமா?

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. உலோக வேலைப்பாடு மற்றும் நெசவுத்தொழிலுக்கு புகழ் பெற்றது. செட்டிநாடு பகுதியான காரைக்குடியில் கட்டிடக்கலை மற்றும் சமையலுக்கு புகழ் பெற்றது. மேலும், கல்விக்கு புகழ் பெற்ற ஊராகவும் காரைக்குடி திகழ்கிறது. இங்கு கிடைக்கும் கண்டாங்கி சேலைகள் மற்றும் ஆத்தங்குடி டைல்ஸ் உலக புகழ் பெற்றது.

இம்மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்களாக சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை, காரைக்குடி செட்டிநாடு அரண்மனை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், குன்றக்குடி சண்முகநாதர் கோயில், காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில், திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், தேவகோட்டை அருகே கண்டதேவி சுவர்ண மூர்த்திஸ்வரர் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணபெருமாள் கோவில்,  இடைக்காட்டூர் புனித இருதய தேவாலயம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளை பார்வையிடலாம்.

அரண்மனையை பார்ப்போமா?

சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனையை பார்ப்போம். வாருங்கள். ராணி வேலுநாச்சியார் 18வது நூற்றாண்டில் வாழ்ந்த அரசி. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போட்டியிட்ட முதல் பெண் அரசி ஆவார். இந்த அரண்மனை 19வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருமலைநாயக்கர் மகால் மற்றும் ராஜபுதானாவின் கட்டிடக்கலையை ஒருங்கிணைத்து கட்டப்பட்டது. இங்கு உள்ள சிறிய நீச்சல்குளத்திற்கு தெப்பக்குளத்தில் இருந்து தினமும் தண்ணீர் வரும் வகையில் பூமிக்கடியில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மாலையிலும் விசேஷ நாட்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். மதுரையில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : palace ,queen ,British , Tourist Spot, ramnad,sivagangai, tourist place
× RELATED வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை...