×

ஆந்திர வங்கியில் 71 கோடி பெற்று மோசடி முன்னாள் மத்திய அமைச்சருக்கு சம்மன்: சிபிஐ அதிகாரிகள் அதிரடி

திருமலை: ஆந்திர வங்கியில் 71 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் தெலுங்கு தேசம் முன்னாள் மத்திய அமைச்சருக்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளனர். ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் சுஜினா சவுத்ரிக். இவருக்கு சொந்தமான நிறுவனத்தின்  மூலமாக ஆந்திரா வங்கியில் கடந்த 2017ம் ஆண்டு எந்தவிதமான ஆவணமும் இன்றி 71 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.இதில் ஆந்திரா வங்கிக்கு 71 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆந்திரா வங்கியில் மோசடி செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஜினா சவுத்ரிக் தங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அதிரடியாக சம்மன் வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று சுஜினா சவுத்ரி சிபிஐ முன் ஆஜராக உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,minister , Andhra Bank, Fraud, former Union Minister and CBI officials
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...