×

இபிஎப் வட்டி 8.65% மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) 2018-19ம் நிதியாண்டிற்கு 8.65 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இதனால், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர். வருங்கால வைப்பு நிதிக்கு 2018-19ம் நிதியாண்டிற்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க அதை நிர்வகிக்கும் அமைப்பு முடிவு செய்தது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தில் ஒரு பிரிவாக உள்ள நிதி சேவைகள் துறை (டிஎப்எஸ்) ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரியில் இபிஎப்ஓ-ன் அறங்காவலர்கள் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் தலைமையில் நடைபெற்றது. அதில், 2018-2019ம் நிதியாண்டிற்கு வட்டி விகிகத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இபிஎப் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

கடந்த 2017-18 நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது.  அதற்கு முந்தைய ஆண்டில் 2015-16ல் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் தற்போதுதான் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.  கடந்த நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. இதனால், 158 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், இந்த நிதியாண்டில் வட்டி வகிகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, ரூ.151.67 கோடி உபரி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2017-18 நிதியாண்டில்தான் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central ,Government , EPF Interest 8.65%, Central Government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...