மலப்புரம் கோயில் விழாவில் பரிதாபம் மரம் விழுந்து 3 பேர் உடல்நசுங்கி சாவு: 2 குழந்தைகள் படுகாயம்

திருவனந்தபுரம்:மலப்புரத்தில்  நடந்த கோயில் திருவிழாவின்போது மரம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர்  பரிதாபமாக  இறந்தனர். 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம்  மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ளது எடக்கரை மலைகிராமம். இங்கு ஏராளமான ஆதிவாசி  காலனிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நேற்று  முன்தினம் திருவிழா நடந்தது. விழாவில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த  ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.  தொடர்ந்து மழையும் கொட்டியது. இதில் கோயில் அருகே இருந்த பழமையான மரம்  வேரோடு சாய்ந்தது. அப்போது மரத்தின் கீழ் நின்ற சங்கரன் (60), வெழுத்தா  மனைவி சாத்தி (59), மஞ்சன் மனைவி சாத்தி (61) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த  வேணு என்பவரின் மகள்கள் அனன்யா (6), ரேணு (10) ஆகிய 2 குழந்தைகளும் படுகாயம்  அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் எடக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்றனர்.காயம் அடைந்தவர்களை மீட்டு நிலம்பூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 கோயில் விழாவில் மரம் விழுந்து 3 பேர் பலியான சம்பவம்  கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: