×

மத்திய, மாநில அரசுகளிடம் குறைகள் இருக்கத்தான் செய்யும்: ஜி.கே.வாசன் சொல்கிறார்

நாகர்கோவில்: மத்திய, மாநில அரசுகளிடம். சில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தலில் பா.ஜ. தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும். வட மாநிலங்களில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. பா.ஜ. தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நடைமுறைக்கு உகந்ததாக இல்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதிமுக அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைந்துள்ளது. தேர்தல் பிரசாரங்களில் இதை உணர முடிந்தது. மத்திய, மாநில அரசுகள் 100 சதவீதம் குறைகள் இல்லாமல் ஆட்சி செய்திருக்கின்றன என கூற மாட்டேன். சில குறைகள் இருக்கத்தான் செய்யும்.
தற்போது நாங்கள் அதிமுகவுடன் அமைத்துள்ள கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். இது மக்கள் விரும்பும் கூட்டணி. தமிழக சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணிதானா என இப்போதே என்னிடம் கேள்வி கேட்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state governments ,GK Vasan , Central, State Government, GK Vasan
× RELATED பத்திரிகை துறையின் கோரிக்கைகளை...