×

பானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து போலீசார் மீட்புக்குழு தயாராக இருக்க உத்தரவு: மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள பானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. இந்த புயலுக்கு பானி என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 30 மற்றும் 1ம் தேதி சென்னை மற்றும் ஆந்திராவுக்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தமிழக காவல் துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள், அனைத்து மண்டல ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில், வரும் 30 மற்றும் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள போலீசார், ஊர் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனே மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police Rescue Commission ,Bani ,district espikes , Bani Storm Warning, District SP, DGP
× RELATED நிதி நிறுவன ஊழியர் மர்ம சாவு