பாலின சமத்துவத்துக்கு என ஆய்வுக்கூடம் அமைக்க சென்னை பல்கலை.-சதர்லான்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் கல்விதுறை (யுமன் ஸ்டடீஸ்) , சதர்லான்ட் நிறுவனம் இணைந்து கிளைட்(ஜென்டர் லேப் பார் இன்குலூசிவ்னஸ் அன்ட் டைவர்சிட்டி எஜூகேசன்) என்ற புதிய சான்றிதழ் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்க உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று கையெழுத்தானது. சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி, சதர்லான்ட் ஏசியா- பசுபிக் பிராந்தியத்துக்கான மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் அனில் ஜோசப் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.  அந்த சான்றிதழ் படிப்பில் 22 மணி நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மணி நேரம் ஆன்லைன் பயிற்சி வகுப்பாகவும், 8 மணி நேரம் கருத்தரங்கு, நேரடி பயிற்சி வகுப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பை முடிப்பவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம், சதர்லான்ட் இணைந்து சான்றிதழகளை வழங்க உள்ளது. இந்த ஆய்வுக்கூடம் அமைக்க சதர்லான்ட் நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது.

இதுதொடர்பாக சதர்லான்ட் நிறுவனத்தின் அனில் ஜோசப் கூறியதாவது:பாலின சமத்துவம் என்பது இந்த காலத்தில் முக்கியமான ஒன்று. அதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நாங்கள் எங்கள் நிறுவனத்தில் பாலின சமத்துவத்தை கடைபிடிக்கிறோம்.   கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின்கீழ் நாங்கள் இந்த ஆய்வுக்கூட்டத்தை அமைக்க உள்ளோம். அந்த ஆய்வுக்கூடத்தில் உள்ள கணினி முதல் அனைத்து பொருட்களையும் சதர்லான்ட் நிறுவனம் வழங்கும். இதற்காக இந்த ஆண்டு மட்டும், 30 லட்சத்தை சதர்லான்ட  வழங்க உள்ளது. ஜூன் மாதம் இந்த சான்றிதழ் படிப்பு தொடங்க உள்ளது. பாலின சமத்துவம் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அனில் ஜோசப் கூறினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னை பல்கலை., மகளிர் விடுதி சுகாதார...