×

2வது நாளாக ஏற்றம்: பெட்ரோல் விலை மீண்டும் உச்சம்: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: பெட்ரோல் விலை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் அதிகரித்தது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்கின்றன. ஏறக்குறைய ஒரு மாத இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் அதிகரித்தது. நேற்று பெட்ரோல் டெல்லியில் 84.20, சென்னையில் 86.96, மும்பையில் 90.83, பெங்களூருவில் 87.04 எனவும், டீசல் டெல்லியில் 74.38, சென்னையில் 79.72, மும்பையில் 81.07, பெங்களூருவில் 78.87 எனவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலையின்படி டெல்லியில் பெட்ரோல் விலையும், மும்பையில் டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளன.கொரோனா ஊரடங்கின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் குறைந்ததால், இந்த இழப்பை ஈடுகட்ட வரியை அதிகரித்தன. பின்னர் சில மாநிலங்களில் வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டது. மத்திய அரசுக்கும் கலால் வரி உயர்வால் அதிக லாபம் கிடைத்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வரி குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், தொடர்ந்து பெட்ரோல் , டீசல் விலைஉயர்த்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என, சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக நாடு மிகப்பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. மத்திய அரசின் அலட்சியப்போக்கால் ஏழைகள்,விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது இருந்தது போல் பெட்ரோல், டீசல் கலால் வரியை குறைக்க வேண்டும். விவசாயிகள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றார்.  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் கொண்டுவராமல் அதிக வரி விதித்து, மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 50.96 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் லிட்டருக்கு 23.43தான். ஆனால், இங்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது என்றார்….

The post 2வது நாளாக ஏற்றம்: பெட்ரோல் விலை மீண்டும் உச்சம்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...