×

தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.14 லட்சம் தங்க கட்டிகளை அபேஸ் செய்த இருவர் கைது

பல்லாவரம்: தொழிலதிபருக்கு சொந்தமான ரூ.14 லட்சம் தங்க கட்டிகளை அபேஸ் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்தவர் ஹபீப் முகமது (30). தொழிலதிபரான இவருக்கு, மலேசியாவில் உள்ள அவரது சகோதரர் ரபீக் (32) என்பவர் சுமார் 400 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தனது நண்பர்கள் மூலம் சென்னைக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். இதன் மதிப்பு ரூ.14 லட்சம். தங்கத்தை வாங்குவதற்காக, தன்னிடம் வேலை செய்து வந்த சென்னை கொரட்டூர், எல்லையம்மன் கோயில் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜியாஉள்ளக் (32) மற்றும் கொரட்டூர், கண்டிகை தெருவை சேர்ந்த சம்பத் (25) ஆகிய இருவரை சென்னை விமான நிலையம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் விமான நிலையம் சென்று ஹபீப் முகமது கூறிய நபரிடம் நகைகளை வாங்கிய ஜியாஉள்ளக் மற்றும் சம்பத் ஆகிய இருவரும் அவற்றை பதுக்கி வைத்து விட்டு, அதற்கு பதிலாக இரும்பு துண்டுகளை ஒரு பையில் போட்டு, அவற்றை ஹபீப் முகமதுவிடம் கொடுத்துவிட்டு, சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில், பார்சலை பிரித்து பார்த்த ஹபீப் முகமது, உள்ளே இரும்பு துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தொழிலாளர்கள் ஜியா உள்ளக் மற்றும் சம்பத்தை தொடர்பு கொண்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சமாளித்தனர்.

இதனால், அவர்களை ஹபீப் முகமது தாக்கியுள்ளார். பின்னர், பல்லாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தங்க நகைகளுக்கு பதிலாக இரும்பு துண்டுகளை கொடுத்து மோசடி செய்த தொழிலாளர்களான ஜியா உள்ளக் மற்றும் சம்பத்தை கைது செய்தனர். மேலும் ஜியாஉள்ளக் மற்றும் சம்பத்தை தாக்கிய குற்றத்திற்காக ஹபீப் முகமது மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,industrialist , Pallavaram, businessman, gold tumors, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...