×

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வியாபாரி கைது

சென்னை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முனியன் (42). காய்கறி வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். முனியனுடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இரண்டு மகள்களும் தாய் உடன் சென்று விட்டனர். தனியாக வசித்து வரும் முனியன், நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவனை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து ெசன்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். உடனே சிறுவனின் பெற்றோர் முனியனை பொதுமக்கள் உதவியுடன் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையில், முனியன், பல நாட்களாக சிறுவனை மிரட்டி வீட்டிற்கு அழைத்து ெசன்று பாலியல் ரீதியாக ெதால்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : businessman ,Paxo , Boy, sexual harassment, vegetable trader, pokso law
× RELATED தொழிலதிபர் கொலை வழக்கு: என்கவுன்டரில் நேற்றிரவு குற்றவாளி சுட்டுக் கொலை