×

பொருளாதார பாதை திட்டம் சீனாவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; அதிபர் ஜின்பிங் உறுதி

பீஜிங்: ‘‘ பொருளாதார பாதை திட்டம் (பிஆர்ஐ) சீனாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ,’’ என சீன அதிபர் ஜின்பிங் உறுதி அளித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவை நிலம் மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும் திட்டத்தை பல லட்சம் கோடி முதலீட்டில் சீனா செய்து வருகிறது. இது, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் லட்சிய திட்டம். இதன் ஒரு பகுதியாகத்தான் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், சீனா நடத்தும் பிஆர்எப் கூட்டத்தை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில், சீனாவின் 2வது பிஆர்எப் கூட்டம் கடந்த 25ம் தேதி தொடங்கி, இன்று வரை நடக்கிறது. இதில், 37  நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், 150 நாடுகளின் பிரதிநிதிகள், 90 சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய ஜின்பிங், ‘‘எனது லட்சிய கட்டமைப்பு திட்டமான பொருளாதா பாதை திட்டம்’(பிஆர்ஐ) சீனாவுக்கு மட்டுமே சொந்தமான திட்டம் அல்ல. இதில் அனைத்து விஷயங்களும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படும். இதில் ஊழல் நிலவுவதை முற்றிலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அண்டை நாடுகளின் பணமதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபடாது,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chancellor ,Jining ,China , Economic Path Plan, China, Xinjiang
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...