×

விளையாட்டு விடுதிகளுக்கு மாணவர் தேர்வு

விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் மாணவ, மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கி நல்ல பயிற்சி பெறுவதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சென்னை,  விழுப்புரம், நெய்வேலி உட்பட மொத்தம் 18 இடங்களில் மாணவர்களுக்கும், 9 இடங்களில் மணவிகளுக்கும் மாநில அரசின் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில்  சேர்ந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக திகழ  7, 8, 9, 11ம் வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்காக மாவட்ட அளவிலான தேர்வு  மே 8, 10 தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில்  வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து மே 7ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள  சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர விரும்புவோர் மே 2ம் தேதி மாலை 5 மணிக்குள் என்ற  www.sdat.tn.gov.in    இணையளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மே 3ம் தேதி காலை 8 மணி முதல்  சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கம், உள் விளையாட்டு அரங்கங்களில் தேர்வு போட்டிகள் நடைபெறும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sports hotels, sports disciplines, students,
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...