×

பிரிட்டீஷ் காதலனை பிரிந்தார் கமல் மகள் ஸ்ருதிஹாசன்

சென்னை: தனது காதலனை பிரிந்துவிட்டார், கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இதுகுறித்து அவரும், காதலனும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே சினிமாவில் நடிக்கின்றனர். இவர்களில் ஸ்ருதிஹாசன் இசையிலும், பின்னணி பாடுவதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், பிரிட்டீஷ்  நாடக நடிகர் மைக்கேல் கோர்சலே என்பவரும், ஸ்ருதிஹாசனும் நண்பர்களாக பழகினார்கள். பிறகு காதலிக்க தொடங்கினார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், ஒருமுறை சென்னையில் நடந்த திருமண விழாவில், கமல்ஹாசனுடன் சேர்ந்து அவர்கள் கலந்துகொண்டார்கள்.  

கடந்த 10ம்  தேதி ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், என் வாழ்க்கையில் இன்னொரு  புதிய கட்டத்தை தொடங்குகிறேன். எல்லா காதல் பாடங்களுக்காகவும் நன்றி. இருண்ட  இடத்தின் ஆழத்தில்தான் ஒளி பிரகாசிக்கும். இசை, மேலும்  படங்கள் என்று காத்திருக்கிறேன்.
என்னுடனேயே நான் இருப்பது, எப்போதுமே  எனது பெரிய காதல் கதையாக இருந்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் தன் காதலனை பிரிந்துவிட்டார் என்று சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.

ஸ்ருதிஹாசனின் காதலர் மைக்கேல் கோர்சலே தனது டிவிட்டரில், வாழ்க்கை நம்மிருவரையும் உலகின் எதிரெதிர் துருவத்தில் வைத்துள்ளது. எனவே, நாமிருவரும்  துரதிர்ஷ்டவசமாக அவரவர் பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும்,  அவர் என் சிறந்த தோழி. அவரை என் தோழியாக அடைந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும், மைக்கேல் கோர்சலேவும் தங்கள் காதலுக்கு பிரேக்அப் சொல்லி  பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shruti Haasan ,Kamal ,lover ,British , Kamal Hassan, Shruti Haasan, Michael Korzle, love
× RELATED ஹாலிவுட் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீர் விலகல்