×

சந்திரபாபு நாயுடுவுக்கு வந்த சோதனை: என்.டி.ஆர் மனைவி தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை

நகரி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான சொத்து குவிப்பு வழக்கு மே 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு மீது என்.டி. ராமராவ் மனைவி  லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் 2005-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்தபோது சந்திரபாபு நாயுடு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து சந்திரபாபு நாயுடு மீதான சொத்து  குவிப்பு வழக்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு என்.டி.ராமராவ் மனைவி லட்சுமி பார்வதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்தநிலையில்  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து லட்சுமி பார்வதி இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 13-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trial ,Chandrababu Naidu ,NTR , Chandrababu Naidu, Sethani, NTR wife, property accumulation case, investigation
× RELATED கொரோனாவுக்கு முடிவு கட்ட மத்திய அரசு...