×

குஜிலியம்பாறை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்: 7 கிராம மக்கள் அவதி

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ராமகிரி-உல்லியக்கோட்டை வழித்தடத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் 7 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாளையம்-திண்டுக்கல் இடையே 7 ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு உல்லியக்கோட்டை ஆளில்லா கிராங்கில் சுரங்கப்பாதை பணி முடிவடைந்து போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. சுரங்கப்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதை மிகவும் பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில்  பாலத்தின் கீழ் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் ஆஸ்பெட்டாஷ் சீட் அமைக்கப்பட்டது.

ஆஸ்பெட்டாஷ் சீட் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் குஜிலியம்பாறை பகுதியில் பெய்த மழையால் பாலத்தின் கீழ் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழத்தடத்திலுள்ள முத்தாம்பாறை, மேட்டூர், தாதனூர், கணக்குபிள்ளையூர், மணியாரம்பட்டி, முத்தம்பட்டி, உல்லியக்கோட்டை ஆகிய 7 கிராம மக்கள் கடந்த 2 நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாலத்தின் அடியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். மேலும் முழுமையாக ஆஸ்பெட்டாஷ் ஷீட் அமைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : railway subway ,Gujiliyaampurai , Gujiliyambara, railway tunnel, rain water, villagers
× RELATED சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை...