×

இந்தியாவில் உயர்கல்வி படித்தவர்களுக்கும் வேலையில்லை : ஆய்வறிக்கையில் தகவல்!

டெல்லி : இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டுகளில் கிராமங்களில் 100 பேரில் 68 பேர் நபர்களுக்கு வேலை கிடைத்த நிலையில் தற்போது அது 64ஆக குறைந்துள்ளதாகவும், நகர்ப்புற வேலை வாய்ப்பு 2016ல் 100க்கு 74 பேருக்கு கிடைத்து என்றால் தற்போது 68ஆக குறைந்துள்ளது என்றும் ஆய்வில் தகவல் அளித்துள்ளனர்.
நகர்புறங்களில் உயர்கல்வி முடித்துவிட்டு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 76ல் இருந்து 78ஆக அதிகரித்துள்ளதாகவும், பிளஸ் 2விற்கு குறைவான கல்வித்தகுதி கொண்டவர்களின் எண்ணிக்கை 72லிருந்து 68ஆக குறைந்துள்ளதுடன் அவர்களின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் அதிகரித்துள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்களில் வேலையற்றோரின் எண்ணிக்கை 16.3 சதவிகிதமாகவும், முதுநிலை பட்டம் பெற்றவர்களில் 14.2 சதவிகிதம் பேருக்கு வேலை இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தென் மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்கின்றனர்.

சட்டீஸ்கர், மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வதாகவும், அங்கு ஆயிரம் பெண்களில் 476 முதல் 560 பெண்கள் வேலைக்கு செல்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிராவில் 366 லிருந்து 400 வரையிலான குறைவான பெண்களே வேலைக்கு செல்கின்றனர். 2000ம் ஆண்டு தொழிற் திறன் 3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றால், ஊதிய உயர்வு 1.5 சதவிகிதமாக உள்ளது. இந்த போக்கு 2016ம் ஆண்டிலும் தொடர்கிறது. தொழில் நிறுவனங்களில் மேலாளர்களின் ஊக்க ஊதியங்கள் 1.5 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பெருவாரியான மக்களுக்கு நிலையான வருமானம் இல்லை என்றும், தொழில் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வியடைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , India,Higher education,Unemployment,Azim Premji University
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...