×

ஆத்தூரில் தடை பிளாஸ்டிக் தாராள புழக்கம்

* மலைபோல் கழிவுகள் குவிப்பால் நோய் பரவும் அபாயம்

செம்பட்டி : ஆத்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கதையாக உள்ளது. மலைபோல் குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்ப்டடுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜன.1ம் தேதி பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்தது. தொடர்ந்து இதற்கான ஆய்வு, பறிமுதல், விழிப்புணர்வு என அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பல இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பட்டியலில் தற்போது பிளாஸ்டிக் கப், பையையும் மறைத்து விற்று வருகின்றனர்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆத்தூர் மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகம் பின்புறம் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதே இதற்கு சாட்சி. இதுபோல் அரசு மாணவர் விடுதி பின்புறம் 10 டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகி பல்வேறு நோய்களை பரப்பி வருகின்றன.இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழக அரசு தடை போட்ட போதிலும் பிளாஸ்டிக் ஒழிப்பில் ஆத்தூர் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.

இதனால் ஆத்தூர் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குனர் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Audrey , plastci ban,Aathur, wastages ,mountain
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்