×

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, விடுப்பு எடுத்த அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பணிக்கு திரும்ப முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி : புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, விடுப்பு எடுத்த அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன், அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்றும்  நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே புயல் குறித்த தகவல் மற்றும் தொடர்புக்கு இலவச எண் 1077 என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளர், மாவட்டஆட்சியர், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanaswamy ,departure ,government departments , Banking, Storm, Warning, Puthuvai, Chief Minister, Narayanasamy, Advice
× RELATED ஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து...