×

இலங்கையில் காவல்துறை தலைவர் பதவி விலகி விட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு

கொழும்பு : இலங்கையில் காவல்துறை தலைவர் பதவி விலகி விட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்பு துறை செயலாளர் பதவி விலகிய நிலையில் காவல்துறை தலைவரும் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால், அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டேன் என்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maithripala Sirisena ,police chief ,Sri Lanka , Sri Lankan, police, blasts, president, Maithripala Sirisena, announcement, resign
× RELATED இந்தியா -இலங்கை - மாலத்தீவு 6...