×

இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் : இலங்கை அதிபர் சிறிசேன

கொழும்பு : இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஹோட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று  இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெடிகுண்டு தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 140க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். தற்போது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று  தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார் ஜக்ரன் ஹஸிம். இவர் இலங்கை தாக்குதலில் தொடர்பு உள்ளவர் என்று தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cleric ,Sirisena ,Sri Lankan ,government ,bomb explosion ,Hasim Hotel , Sri Lankan President Maithripala Sirisena,Sri Lanka radical ,cleric Hashim died ,hotel attack
× RELATED எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது...