×

நாமக்கல் முட்டைக்கு பண்ணை விலை 305காசு என்இசிசி விலை 335 காசு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 305 காசாகவும், என்இசிசி பரிந்துரை விலை 335 காசாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கு கடந்த 3 வாரமாக இரட்டை விலை நிர்ணயிக்கப் படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று 100 முட்டைகளின் பண்ணை பரிந்துரை விலை ₹335 என அறிவித்துள்ளது.  இதன்படி, ஒரு முட்டை விலை 335 காசுகள். இதற்கு போட்டியாக பண்ணையாளர்கள் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை 305 காசுகளாக நிர்ணயித்துள்ளனர். இந்த விலைக்குதான் பண்ணைகளில் முட்டை  விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், நாமக்கல் பகுதியில் உள்ள கடைகளில் ஒரு முட்டை ₹4க்கு விற்கப்படுகிறது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal Egg Farm Price 305 Coin NIC , Namakkal egg, NIC price , 335 coins
× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 33...