×

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை அதிகம். இருப்பினும் எரிபொருள் சிக்கனம் கருதி டீசல் கார்களை பலர் தேர்வு செய்து வந்தனர். குறிப்பாக, அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், டாக்சி ஓட்டுபவர்கள்,  டிராவல்ஸ் நடத்துபவர்கள் டீசல் கார்களை வாங்க ஆர்வம் காட்டினர். ஆனால், பெட்ரோல், டீசல் இடையே விலை வித்தியாசம் குறைந்து வருகிறது. இதனால், கூடுதல் பணத்தை முதலீடு செய்து டீசல் கார் வாங்குவதால் பெரிய நன்மை இல்லை. எனவே, டீசல் கார்களுக்கு வரவேற்பு குறைந்து  வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி நிறுவனத்துக்கும் இதே நிலை வந்துள்ளது.

  இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா கூறியதாவது: அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் 6 தர விதிகள் அமலுக்கு வருகின்றன. சிறிய கார்களை பிஎஸ் 6 தர நிலைக்கு உயர்த்த கூடுதல் செலவாகிறது. இதனால் வாகன விலையையும் உயர்த்த வேண்டும். விலையை  உயர்த்தினால், சிறிய ரக கார்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். டீசல் கார்கள் ஏற்கெனவே விலை அதிகம். அதோடு, இவற்றின் பயன்பாடும் குறைந்து வருகிறது.  சந்தையில் வரவேற்பும் இருப்பதில்லை. எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ேளாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு டீசல் கார்களுக்கு தேவை ஏற்பட்டால், 1,500 சிசி திறன் கொண்ட டீசல்  இன்ஜின்களை உருவாக்க உத்தேசித்துள்ளோம் என்றார். மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒட்டு மொத்த கார் உற்பத்தியில் 23 சதவீதம் டீசல் கார்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maruti Suzuki , Maruti Suzuki,uspend ,diesel ,car
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...