×

ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை குடந்தை ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டருக்கு சீல்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நால்ரோடு அருகே திருநாராயணபுரத்தில்  ஒரு தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர்,  மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது. இங்கு கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்டு குழந்தையின் தன்மை குறித்து பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது.இந்த சோதனைகள் பற்றிய குறிப்புகளை சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முறையான அறிக்கை தயார் செய்து பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு ஸ்கேன் செய்யப்படும் விபரங்களை முறையாக பராமரிக்கவில்லையென டெல்லியில் உள்ள மத்திய சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது.  அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை கும்பகோணத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் சோதனை நடத்தினர்.

அப்போது சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளின் ஸ்கேன் பதிவுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்கேன் சென்டரை பூட்டி சீல் வைக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து தமிழக சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் காந்தி தலைமையில் அலுவலர்கள் நேற்று மாலை ஸ்கேன் சென்டரை பூட்டி சீல் வைத்தனர். அப்போது, வருவாய் ஆய்வாளர் சித்ரா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kunda Hospital Scan Center , Kudan hospital, scan center, seal
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி