×

பி.இ., பி.டெக்.,- ஐ தொடர்ந்து எம்.இ, எம்.டெக். படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வையும் நடத்த அண்ணா பல்கலை மறுப்பு

சென்னை: எம்.இ, எம்.டெக் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பி.இ, பி.டெக் படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து பி.இ, பி.டெக் நுழைவுத்தேர்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தின் இணை தலைவராக விவேகானந்தனை நியமித்தது. இவர் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக உள்ளார். விவேகானந்தனின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை மையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, துணை வேந்தர் சூரப்பா ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை மேற்கொள்ளாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த ஆண்டு பி.இ, பி.டெக் நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் எம்.இ., எம்.டெக் படிப்புகளுக்கான டான்கா எனப்படும் தமிழ்நாடு காமன் அட்மிஸ்ஸின்ஸ் நுழைவுத் தேர்வையும், அதேபோல் எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணாபல்கலைக்கழகம் நடத்தாதது என்று தெரிவித்திருக்கின்றனர். அதில் உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டும் நுழைவு தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., படிப்புகளை தொடர்ந்து எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ பட்டபடிப்புகளுக்கும் தற்போது கலந்தாய்வினை நடத்தப்போவதியில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. இதனால் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : B.Tech ,M.Tech ,M.E. ,entrance examination ,Anna University , Anna University, Entrance Exam, M.E., M.Tech., Study, Dispute
× RELATED கோவையில் எம்.எஸ்,எம்.இ.தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டம்..!!