×

2036ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வகையில், 68 வயதாகும் ரஷ்ய அதிபர் புதினின் அதிமுக்கிய உத்தரவு

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் பதவியில் வரும் 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். 68 வயதாகும் புதின், முதன்முதலில் கடந்த 2000ம் ஆண்டு  ரஷிய நாட்டின் அதிபர் பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024ல் நிறைவடைகிறது. இந்நிலையில், 2036ம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.  ரஷ்யா நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது. இந்தச் சட்டத்தை மாற்றி, ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்கும் சட்டத்தை புதின் கடந்தாண்டு முன்மொழிந்தார். இது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புதின் நேற்று ஒப்புதல் வழங்கினார். இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் புதினால் தேர்தலில் போட்டியிட முடியும். அதாவது 2036ம் ஆண்டு வரை அதிபர் ரேசில் அவரால் இருக்க முடியும். உயிருடன் இருக்கும் வரை அதிபர் பதவியில் தொடரவே புதின் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. …

The post 2036ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வகையில், 68 வயதாகும் ரஷ்ய அதிபர் புதினின் அதிமுக்கிய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Mint ,Moscow ,Vladimir Buddin ,Russia ,President ,Newt ,Dinakaran ,
× RELATED 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின்...